கனடாவில் திருடப்பட்ட முயல்: காவல்துறை தீவிர விசாரணை
கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் மார்க்கம் நகரில் நடைபெற்ற 182-வது மார்க்கம் கண்காட்சியில் , 10 வயது சிறுமிக்குச் சொந்தமான 'பிஸ்கட்' என்ற சிறிய ரக முயல் திருடப்பட்ட சம்பவம் குறித்துக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த அக்டோபர் 3-ஆம் திகதி மாலை வேளையில், மார்க்கம் கண்காட்சி வளாகத்திலுள்ள 'செல்லப்பிராணிகள் மற்றும் பறவைகள் அரங்கில்' இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த முயல் காணாமல் போனதைத் தன்னார்வலர்களும் பிற பங்கேற்பாளர்களும் கண்டறிந்து உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.

10 வயது சிறுமி கண்காட்சிக்காகக் கொண்டு வந்த ஒரு விலங்கை யாரோ திருடிச் சென்றுள்ளது மிகுந்த ஏமாற்றமளிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பங்கேற்பாளர்கள் தங்களது அதிக நேரம், உழைப்பு மற்றும் அக்கறையைச் செலுத்தி இந்த விலங்குகளை வளர்க்கிறார்கள்.
இது வெறும் பொருளின் இழப்பு மட்டுமல்ல; சரியான பராமரிப்பும் கவனமும் தேவைப்படும் ஒரு வாழும் உயிரினத்தின் திருட்டு. எங்கள் கண்காட்சிக் குடும்பத்தில் இந்த விலங்குகளும் ஒரு அங்கமாகும் என தெரிவித்துள்ளனர்.