கனடாவில் இறந்தவரை அடக்கம் செய்வதற்கான காணி இவ்வளவு விலையா? எந்த நகரில்?
கனடாவின் வான்கூவார் நகரில் மயான பூமியின் விலைகள் பெருமளவில் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காணி நிலங்களுக்கு நிகரான அடிப்படையில் இறந்தவர்களை நல்லடக்கம் செய்யும் காணிகளுக்கான விலைகளும் வெகுவாக உயர்வடைந்துள்ளன.
வான்கூவாரின் பேர்னாபே பகுதியில் ஒருவரை அடக்கம் செய்வதற்கான காணித் துண்டின் விலை 54000 டொலர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இணைய வழியில் மயான பூமிகள் இவ்வாறு விற்பனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்ப்படுகின்றது.
5000, 12000, 25000 மற்றும் 50000 டொலர்கள் என்ற அடிப்படையில் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான சிறு காணித்துண் விற்பனை செய்யப்படுகின்றது.
கடலையும் மலைகளையும் சூழ்ந்துள்ள இந்தப் பகுதியில் காணித் துண்டுகளுக்கு நிலவி வரும் பற்றாக்குறையினால் இவ்வாறு கூடுதல் விலைக்கு விற்பனை செய்ப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வீடமைப்பு மற்றும் காணிகளுக்கு நிலவி வரும் அதேயளவான தட்டுப்பாடு மயான பூமிகளிலும் காணப்படுகின்றது.