கனடிய பொருளாதாரத்தில் பதிவான சாதக நிலைமை
கனடிய பொருளாதாரத்தில் சாதக நிலைம பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஏப்ரல் மாதம் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது.
ஏப்ரல் மாத மொத்த தேசிய உற்பத்தி 0.3 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
மொத்த விற்பனை வர்த்தகம், எண்ணெய் மற்றும் வாயு அகழ்வு மற்றும் உற்பத்தி துறைகளில் ஏற்பட்ட சாதக நிலைமையினால் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது.
மார்ச் மாதம் மொத்த உள்நாட்டு உற்பத்தி பூச்சிய வளர்ச்சியை பதிவு செய்திருந்த நிலையில், ஏப்ரலில் சிறிதளவு மாற்றம் பதிவாகியுள்ளது.
எவ்வாறெனினும் பொருளாதார வளர்ச்சி சிறியளவில் பதிவாகிய காரணத்தினால் பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை செலுத்தாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.