பிரதான சாலையில் இளம் பெண் சடலம்.. அம்பலமான தாயாரின் கொடூரம்
ஆல்பர்ட்டாவின் Cochrane அருகே இளம் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், அவரது தாயாரை கைது செய்து கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கல்கரி பகுதியை சேர்ந்த 60 வயது Debora Joyce Rabik என்பவரையே கொலை வழக்கு தொடர்பில் வெள்ளிக்கிழமை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இவரது 24 வயது மகள் Sarah Rabik என்பவரது சடலம் 2020 பிப்ரவரி மாதம் 26ம் திகதி Cochrane அருகே பிரதான சாலையில் கண்டெடுக்கப்பட்டது.
தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட உடற்கூராய்வில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளது உறுதியானது. இந்த நிலையிலேயே நீண்ட ஓராண்டுக்கு பின்னர் Debora Joyce Rabik கைதாகியுள்ளார்.
முதலில் இருவருக்குமான உறவு என்ன என்பதில் பொலிசாருக்கு குழப்பம் நீடித்து வந்ததாகவும், ஆனால் சமூக ஊடக பதிவுகளை ஆய்வு செய்ததில் இருவரும் தாயார்- மகள் என உறுதி செய்யப்பட்டதாக பொலிசார் கூறுகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பிலும், கொலைக்கான பின்னணி தொடர்பிலும் நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் தெரிய வரும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.