பொது சுகாதார உத்தரவுகள் மீறல்: கல்கரியில் இருவர் கைது

Arbin
Report this article
கொரோனா பரவல் காலகட்டத்தில் பொது சுகாதார உத்தரவுகளை மீறியதாக கூறி இரு கிறிஸ்தவ மத போதகர்களை கல்கரி பொலிசார் கைது செய்துள்ளனர்.
கூட்டத்தை திரட்டுதல், கூட்டத்தில் பங்கேற்பு, சட்டத்திற்கு புறம்பாக பொதுமக்களை திரட்டுதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக ஆர்தர் மற்றும் டேவிட் பாவ்லோவ்ஸ்கி ஆகிய இருவரையும் சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.
இந்த வார தொடக்கத்தில், ஆல்பர்ட்டா சுகாதாரத்துறை நீதிமன்ற ஆணை ஒன்றைப் பெற்றது, அதில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் போன்ற கூட்டங்களுக்கு தடை கோரியிருந்தது.
இந்த நிலையில், பாவ்லோவ்ஸ்கி திரட்டிய கூட்டத்தில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை எனவும், மாஸ்க் பயன்படுத்தப்படவில்லை எனவும் கூட்டத்தை கட்டுப்படுத்த தவறினார் எனவும் கல்கரி பொலிசார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கொரோனா பரவல் காண்டுவரும் இந்த நாட்களில் முழுமையும் அந்த சகோதரர்கள் இருவரும் பெரும் கூட்டத்தை கூட்டியதாகவும், மாஸ்க் அணிந்திராத மக்களின் கூட்டமாக அது இருந்தது எனவும், ஆனால் தேவாலயத்தின் உள்ளே சுகாதாரத்துறை அதிகாரிகளை அவர் அனுமதிக்கவும் மறுத்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக ஆர்தர் கடந்த ஆண்டும் பெருந்தொகை பிழை செலுத்தியுள்ளார்.
மட்டுமின்றி கல்கரியில் மாஸ்க் மறுப்பாளர்களின் கூட்டங்களில் கலந்து கொண்டும் பாவ்லோவ்ஸ்கி உரையாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.