கல்கரி புயல் காற்று சேதம் 2.8 பில்லியன் டொலர்
கல்கரியில் புயல் காற்று காரணமாக 2.8 பில்லியன் டொலர் நட்டயீட்டுக் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கல்கரியில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட புயல் காற்று காரணமாக ஏற்பட்ட சேதங்களுக்காக இவ்வாறு 2.8 பில்லியன் டொலர்கள் நட்டஈடு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
கனடிய வரலாற்றில் பதிவான இரண்டாவது மிகப் பெரிய இயற்கை அனர்த்தம் இது என தெரிவிக்கப்படுகிறது.
கனடிய காப்புறுதி நிறுவனம் இது தொடர்பிலான தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி புயல் காற்று, மழை வெள்ளம், கடும் மழை என்பவற்றினால் கல்கரி நகரம் பாதிக்கப்பட்டது.
இதனால் பெரும் எண்ணிக்கையிலான வீடுகள் சேதமடைந்திருந்தன. சுமார் 20 வீதமான வீடுகள் சேதமடைந்து இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மொத்தமாக புயல் காற்று சீற்றத்தினால் சேதங்களை எதிர் நோக்கிய 130000 பேர் காப்புறுதி இழப்பீடுகளுக்காக விண்ணப்பம் செய்திருந்தனர்.
இந்த விண்ணப்பங்களின் அடிப்படையில் மொத்தமாக 2.8 பில்லியன் டொலர் நட்டஈட்டு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.