ஒட்டகங்களின் அழகுப் போட்டி

Qatar
By Yadu Dec 05, 2022 07:24 AM GMT
Report

கத்தாரில் ஃபிபா உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் அங்கு நடத்தப்பட்ட மற்றொரு போட்டியும் மக்களை வெகுவாக கவர்ந்தது.

ஒட்டகங்களின் அழகுப் போட்டி மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இந்த போட்டியில் உலகின் மிக அழகான ஒட்டகம் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டது.பல நாட்கள் நடந்த இந்தப் போட்டியில் 700 க்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் பங்கேற்றன.

இந்த ஒட்டகப் போட்டி மத்திய கிழக்கு முழுவதும் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.

இந்த பிராந்தியத்தில் ஒட்டகங்கள் தலைமுறை தலைமுறைகளாக மக்களுடன் தொடர்புடையவை.

இந் நிகழ்ச்சியில் அதிகபட்சமாக பால் கொடுக்கும் ஒட்டகமும் தேர்வு செய்யப்பட்டு அதற்கும் பரிசு வழங்கப்பட்டது.

'இந்த அழகுப் போட்டி நடத்துவதற்கான திட்டமிடல் என்பது உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளுக்கு செய்யப்பட்ட ஏற்பாடுகளைப் போன்றது.

ஒட்டகங்களுக்கான உலக அழகுப் போட்டி இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முழு நிகழ்வின்போதும் யாரும் நேர்மையற்ற செயல்களைச் செய்யக்கூடாது என்பதை ஏற்பாட்டுக் குழு கவனித்துக் கொண்டது’ என்று கத்தார் ஒட்டக ஜெயின் கிளப்பின் தலைவர் ஹமத் ஜாபர் அல் அத்பா தெரிவித்துள்ளார்.

வெற்றி பெற்ற உலக அழகிக்கு என்ன பரிசு?

இவ்விழாவில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடிக்கும் ஒட்டகங்களுக்கு கோப்பைகள் வழங்கப்படுகின்றன.

அவற்றின் உரிமையாளர்களுக்குப் பணப் பரிசும் வழங்கப்பட்டது.நஜா என்ற ஒட்டகம் முதல் இடத்தைப் பிடித்தது அதன் உரிமையாளருக்கு 200,000 கத்தார் ரியால்கள் (ரூ. 44,72,484) தொகை பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

அதிக பால் கொடுத்த ஒட்டகத்தின் உரிமையாளருக்கு 15,000 ரியால் பரிசுத்தொகை கிடைத்தது.

இந்த அழகுப் போட்டியில் கலந்துக் கொள்ளும் அனைத்து ஒட்டகங்களும் போட்டிக்கு முன்னதாக முழுமையாக பரிசோதிக்கப்பட்டன.

இந்த போட்டியின் ஒட்டகங்கள் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படவில்லையா அல்லது ஒப்பனை செய்யப்பட்டுள்ளனவா என்று சோதிக்கப்பட்டது.

பல ஒட்டக உரிமையாளர்கள் தங்கள் ஒட்டகங்களுக்கு போடோக்ஸ் ஃபில்லர்கள் மற்றும் சிலிகான்களை கொடுப்பதை கண்காணிப்புக் குழுவினர் கண்டறிந்தனர்.

கடந்த ஆண்டு, சவுதி அரேபியாவில் நடைபெற்ற உலக ஒட்டக அழகுப் போட்டியில், ஒப்பனை மாற்றங்கள் காரணமாக பல ஒட்டகங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் போட்டியில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பை இழந்தன.

வளைகுடா நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர்.

ஒட்டகங்களின் வயது மற்றும் இனத்தைப் பொறுத்து அவை வெவ்வேறு போட்டிகளில் பங்கேற்கப்பட உள்ளன.

இந்தப் போட்டியில் ஒட்டகங்களின் அழகு வெவ்வேறு அளவுகளில் அளவிடப்படுகிறது. உதாரணமாக கருப்பு ஒட்டகங்கள் உடல் அளவு, தலை மற்றும் காதுகளின் அடிப்படையில் பட்டியல் இடப்படுகின்றன.

மறுபுறம், மகதீர் காலத்தின் ஒட்டகங்களுக்கு அவற்றின் காதுகள் கீழே வளைந்திருந்தாலும் நேராக நிற்கிறதா என்று பார்க்கப்படும். இதனுடன் இந்த வகை ஒட்டகங்களின் வாயின் வளைவு எவ்வாறு உள்ளது என்பதும் பார்க்கப்படுகிறது.

அசெல் இன ஒட்டகங்களைப் பொறுத்த வரை அவை சில சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன.அவற்றின் காதுகள், அழகுக்கான முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.  

9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
நன்றி நவிலல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US