ட்ரம்ப் கனடாவிற்குள் வர முடியுமா ?
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடாவிற்குள் பிரவேசிக்க முடியாது என தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க மென்ஹட்டன் நீதிமன்றில் டிரம்ப் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ட்ராம்பிற்கு எதிரான 34 குற்றச்சாட்டுகள் நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் சட்டங்களின் பிரகாரம் குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டுக்குள் பிரவேசிக்க முடியாது. கனடிய குடிவரவு சட்டத்தரணி மாரியோ பெலிசினோ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஆபாச நடிகை ஒருவருடன் பேணிய தொடர்பினை மூடி மறைப்பதற்காக ட்ராம்ப் பணம் வழங்கிய விவகாரம் நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது இந்த தகவல் கசிய விடப்படவிருந்தது என தெரிவிக்கப்படுகிறது.
ஆபாச நடிகையுடன் பேணிய தொடர்பு குறித்த தகவல்கள் வெளியானால் தமது தேர்தல் வெற்றி பாதிக்கும் என கருதி ட்ராம்ப் குறித்த பெண்ணுக்கு பணம் கொடுத்து இந்த தகவல்கள் வெளிவருவதனை மூடி மறைத்தார் என தெரிவிக்கப்படுகிறது.
மோசடியான வர்த்தக ஆவணங்களை தயாரித்தார் என ட்ரம்ப் மீது குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது.
எதிர்வரும் ஜூலை மாதம் 11-ம் திகதி ட்ராம்பிற்கு எதிரான வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளது.
குற்றவாளி ஒருவர் சட்டத்தின் பிரகாரம் கனடாவிற்குள் பிரவேசிக்க முடியாது என சட்டத்தரணி மாறியோ தெரிவித்துள்ளார்.