பாகிஸ்தான் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு கனடா நேசக்கரம்
பாகிஸ்தானில் ஏற்பட்ட பாரிய வெள்ளப் பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக கனேடிய அரசாங்கம் உதவிகளை வழங்க முன்வந்துள்ளது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஐந்து மில்லியன் டொலர்களை வழங்க உள்ளதாக கனடா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
வெள்ளம் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிதி ரீதியான உதவிகளை வழங்குவதாக கனேடிய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
வெள்ளம் அனர்த்தம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் களத்தில் பணியாற்றி வரும் நம்பகமான நிறுவனங்களின் ஊடாக உதவிகள் வழங்கப்பட உள்ளது.
பாகிஸ்தானில் கடந்த மூன்று மாத காலத்தில் 375.4 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளது. மழை வெள்ளம் மண்சரிவு காரணமாக பாகிஸ்தானில் பலி எண்ணிக்கை 1300 ஆக உயர்வடைந்துள்ளது.
பாகிஸ்தானுக்கான பயணங்கள் தொடர்பில் கனடா பயண அறிவுறுத்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மனிதாபிமான அடிப்படையில் கனடா தொடர்ச்சியாக பாகிஸ்தானுக்கு உதவும் என அறிவித்துள்ளது.