லெபனான் – இஸ்ரேல் போர் தொடர்பில் கனடா விடுத்துள்ள கோரிக்கை!
லெபனான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என கனடா உள்ளிட்ட நாடுகள் கோரியுள்ளன.
கனடா அமெரிக்கா மற்றும் ஜி-ஏழு நாடுகளில் அங்கம் வகிக்கும் நாடுகளும் சில மத்திய கிழக்கு நாடுகளும் இந்த கோரிக்கையை கூட்டாக முன் வைத்துள்ளன.
இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையில் உடனடியாக போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லெபனான் மற்றும் இஸ்ரேல் எல்லை பிரதேசத்தில் அண்மைய நாட்களாக பரியளவில் மோதல் சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றன என்பதை குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த நிலைமை அதிகரிக்கப்படுவதனை தடுக்கும் நோக்கில் போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வாரத்தில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதல்களில் லெபனானில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு நடத்தப்படும் வான் தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே 21 நாட்கள் உடனடி போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என கனடா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன.