ரஷ்யாவிற்கு கண்டனம் வெளியிடும் கனடா
அமெரிக்க தேர்தலில் தலையீடு செய்வதற்கு ரஷ்யா மேற்கொண்ட முயற்சிகளை கனடா கண்டித்துள்ளது.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா தலையீடு செய்ய முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கை வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது என கனடா தெரிவித்துள்ளது.
போலியான தகவல்களை பிரசாரம் செய்து மக்களை திசை திருப்பும் முயற்சிகளில் ரஷ்யா ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான அரசாங்கம் ரஷ்யாவிற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியதன் பின்னர் இவ்வாறு தேர்தலில் தலையீடு செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டொமினிக் லீபிலான்க், ரஷ்யாவின் நடவடிக்கைகளை கண்டித்துள்ளார்.
இந்த அரசியல் தலையீடு தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இவ்வாறான ஒரு பின்னணியில் ரஷ்யாவின் முயற்சி கண்டிக்கப்பட வேண்டியது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.