அரசாங்கத்தின் திட்டங்களுக்கு தடை ஏற்படுத்தும் கன்சர்வேட்டிவ் கட்சி! பிரதமர் குற்றச்சாட்டு
கன்சர்வேட்டிவ் கட்சி அரசாங்கத்தின் திட்டங்களுக்கு தடை ஏற்படுத்தி வருவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, அரசாங்கத்தின் திட்டங்கனை முன்னெடுப்பதற்கு ப்ளோக் கியூபிக்கோ மற்றும் என்.டி.பி கட்சி என்பன ஆதரவளிக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
ஆறு வார கால இடைவெளியின் பின்னர் இன்று திங்கட்கிழமை (31-01-2022) நாடாளுமன்ற அமர்வுகள் தொடங்கவுள்ள நிலையில் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
அரசாங்கத்தின் முனைப்புக்களுக்கு எதிர்க்கட்சிகள் காத்திரமான முறையில் ஆதரவினை வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கனேடிய மக்களின் நலன்களை கருத்திற் கொள்ளாது கன்சர்வேட்டிவ் கட்சி தொடர்ச்சியாக அரசாங்கத்தின் அனைத்து திட்டங்களுக்கும் தடை ஏற்படுத்தி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.