கனடாவில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரம்: ஒரே நாளில் 126 பேர் பலி!
கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 14 ஆயிரத்து 571 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 126 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
இதையடுத்து கனடாவில் 29 இலட்சத்து 4 ஆயிரத்து 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 32 ஆயிரத்து 495 பேர் மரணமடைந்திருப்பதாக தெரிவந்துள்ளது.
கனடாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 2 இலட்சத்து 91 ஆயிரத்து 131 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா தொற்றுக்குள்ளாகி 1,130 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கனடாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13 ஆயிரத்து 842 பேர் தொற்றிலிருந்து மீண்ட நிலையில், இதுவரையில் 25 இலட்சத்து 80 ஆயிரத்து 399 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.