கனடாவில் குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
கனடாவில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டுவோர் நெருக்கடி நிலைமைகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறைந்த வருமானம் ஈட்டுவோரினால் வங்கிகளில் கடன் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாக கூட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டுவோர் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆய்வு நிறுவனமொன்றினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறைந்த வருமானம் ஈட்டும் நபர்களுக்கு வங்கிகள் வழமையான கடன் வசதிகளை வழங்குவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் அதிக வட்டி வீதத்திற்கு வேறும் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்றுக்கொள்ள நேரிட்டுள்ளது.
மீள் செலுத்தும் இயலுமை காரணமாக வங்கிகளினால், குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு கடன் வழங்குவதில் சிக்கல் காணப்படுகின்றது.