கனடாவில் அடுத்த ஆண்டில் உணவுப் பொருள் விலை எவ்வாறு இருக்கும்?

Kamal
Report this article
கனடாவில் அடுத்த ஆண்டில் உணவுப்பொருட்களின் விலைகள் தொடர்ந்தும் உயர்வடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2023ம் ஆண்டில் மளிகைப் பொருட்கள் குறிப்பாக உணவுப் பொருட்களின் விலைகள் 7 வீதத்தினால் உயர்வடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
நான்கு பேரைக் கொண்ட குடும்பம் ஒன்றின் வருடாந்த மளிகைப் பொருள் செலவு 1065 டொலர்களினால் சராசரியாக உயர்வடையும் என தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் உணவு விலைகள் குறித்த அண்மைய அ அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 வயதுடைய பெண் ஒருவரின் மொத்த மளிகைப் பொருள் செலவு அடுத்த ஆண்டில் சராசரியாக 3740 டொலர்களாக காணப்படும் எனவும், அதே வயதுடைய ஆண் ஒருவரின் சராசரி செலவு 4168 டொலர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு காலப் பகுதியில் உணவுப் பணவீக்கம் தொடர்ச்சியான அதிகரிப்பினை பதிவு செய்யும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம், பூகோள அரசியல் முரண்பாடுகள், எரிபொருள் விலை அதிகரிப்பு, கோவிட் பெருந்தொற்றின் தாக்கம் என்பனவற்றினால் இவ்வாறு தொடர்ந்தும் விலைகள் உயர்வடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.