கனடா துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி; பாடசாலைகளுக்கு பூட்டு
கனடாவின் வடக்கு யோர்க்கில் ஜேன் ஸ்ட்ரீட் மற்றும் ஃபின்ச் அவென்யூ வெஸ்ட் அருகே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
டொராண்டோ பொலிசார் வடக்கு யோர்க்கில் உள்ள ஃபிர்க்ரோவ் கிரசண்ட் மற்றும் ஜேன் தெருவுக்கு பிற்பகல் 1:40 மணியளவில் அழைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் 20 வயதுக்கு இடைப்பட்ட நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதாகவும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்கிடமான விளக்கம் எதுவும் இல்லை, ஆனால் இது இலக்கு வைக்கப்பட்ட துப்பாக்கிச் சூடு என்று பொலிசார் நம்புகிறார்கள்.
SHOOTING:
— Toronto Police Operations (@TPSOperations) October 6, 2022
Firgrove Cres + Jane St
1:41pm
- Gunshots heard
- Police are on scene
- One person located who has been shot
- Officers commenced first aid
- Nearby school in lockdown#GO1946158
^lb
இந்த சம்பவத்தை தொடர்பில் அருகிலுள்ள பாடசாலைகளான Firgrove Public School, St. Francis De Sales மற்றும் Westview Centennial Secondary School ஆகியவை உடன் மூடப்பட்டதாகவும் பின்னர் அவை திறக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.