கனடாவில் கார்பன் உமிழ்வு அளவு அதிகரிப்பு
மத்திய அரசின் 2030ஆம் ஆண்டுக்கான உமிழ்வு மதிப்பீடு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட அதிகரித்துள்ளதாகக் கூறுகிறது.
கனடாவின் கார்பன் வாயு உமிழ்வு இலக்குகள் குறித்த முன்னேற்ற அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு அறிக்கையின்படி, அனைத்து திட்டமிடப்பட்ட மற்றும் அறிவிக்கப்பட்ட கொள்கை நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டால், 2030இல் கனடாவின் உமிழ்வு சுமார் 513 மில்லியன் டன்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில் 2030இல் கார்பன் விலையை டன்னுக்கு 170 டாலராக உயர்த்தும் திட்டமும் அடங்கும். 2023ஆம் ஆண்டு மதிப்பீட்டில், அனைத்து முன்மொழியப்பட்ட விதிமுறைகளுடன் 2030இல் உமிழ்வு 467 மில்லியன் டன்களாக இருக்கும் எனக் கூறப்பட்டிருந்தது.
சமீபத்திய மதிப்பீடு, எண்ணெய் மற்றும் எரிவாயு உமிழ்வு உச்சவரம்பை (எமிஷன்ஸ் கேப்) விலக்கியுள்ளது.
இது 2030இல் உமிழ்வை மேலும் 3 மில்லியன் டன்கள் குறைத்திருக்கும், ஆனால் ஒட்டாவா மற்றும் ஆல்பர்ட்டா இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இது செயல்படுத்தப்படாது.
பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தின் கீழ் கனடாவின் இலக்கு, 2005ஆம் ஆண்டு அளவைவிட 40 முதல் 45 சதவீதம் குறைத்து, 2030இல் உமிழ்வை 455 மில்லியன் டன்களுக்கு மேல் அதிகரிக்காமல் வைத்திருப்பதாகும். இந்த அறிக்கை கனடாவின் காலநிலை இலக்குகளை அடைவதில் பின்னடைவை சுட்டிக்காட்டுவதாக உள்ளது.