கனடாவில் கொரோனா தொற்று அதிகம் உள்ள மாகாணம் இதுதான்!
கனடாவில் உள்ள மாகாணம் ஒன்றில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகம் உள்ள நிலையில் குறித்த மாகாணத்தில் புதிய கட்டுப்பாடுகள் இப்போதைக்கு இல்லை என அறிவிக்கபட்டுள்ளது.
கடனாவில் மாகாணமான சஸ்காச்சுவானில்தான் (saskatchewan) இவ்வாறு கொரோனா தொற்று பரவல் அதிகமாக காணப்பட்டுவதாக பிரீமியரான scott Moe தெரிவித்துள்ளார்.
இந்த மாகாணத்தில் நேற்றைய முன்தினம் (06) புதன்கிழமை மத்திரம் 4,313 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதேவேளை அதே நாளில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.
கனடாவில் கடந்த ஏழு நாட்களில் சஸ்காச்சுவான் மாகாணத்தில்தான் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என பெடரல் அரசின் கூற்றின் தெரியவந்துள்ளது.
சஸ்காச்சுவான் மாகாணத்தில் ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள நிலையில் இப்போதைக்கு இருக்கும் கட்டுப்பாடுகளே தொடந்து அமுலில் இருக்கும் என scott moe கூறியுள்ளார்.