மீண்டும் தழைக்கும் கனடா - இந்தியா நட்பு
இந்தியாவும் கனடாவும் சீர் குழ்லைந்த தமது உறவைச் சீரமைக்கும் புதிய திட்டத்துக்கு இணக்கம் தெரிவித்துள்ளன.
சிறிது காலம் கசப்படைந்திருந்த இருதரப்பு உறவு கனடியப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) நிர்வாகத்தின்கீழ் மேம்பட்டது.
கனடிய வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand) புதுடில்லியில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரைச் (Jaishankar) சந்தித்தார். அதோடு அனிதா ஆனந்த் (Anita Anand) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்தார்.
இந்நிலையில் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பானது இருதரப்பு உறவைச் சீரமைக்கும் முயற்சியாக அது பார்க்கப்படுகிறது.
சீக்கியப் பிரிவினைவாதத் தலைவரின் மரணத்தில் இந்தியாவுக்குத் தொடர்பிருப்பதாய்க் கனடா குற்றஞ்சாட்டியதை அடுத்து 2023இல் கனடா - இந்தியா உறவில் விரிசல் ஏற்பட்டது. அதன்பின்னர் கடந்த மார்ச்சில் கார்னி கனடா பிரதமரான பிறகு இருதரப்பு உறவு மேம்பட்டு வருகிறது.