எந்தவொரு பிரச்சினைக்கும் கோபம் தீர்வாகாது! கனேடிய பிரதமர்
குரோதம் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வாகாது என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தெரிவித்துள்ளார்.
கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து இடம்பெற்று வரும் ட்ரக் வண்டி தொடரணி போராட்டம் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
குறித்த ட்ரக் வண்டி போராட்டக்காரர்கள் உள்ளுர் வர்த்தகர்களை துன்புறுத்தியதுடன், நாசி கொடிகளை தாங்கி எதிர்ப்பு போராட்டத்தை நடத்துவதாகவும், வீடற்றவர்களின் உணவினை களவாடுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ள பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனிமைப்படுத்தலில் இருந்து கொண்டு இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கருத்துச் சுதந்திரம், ஒன்றுகூடுவதற்கான உரிமை மற்றும் ஒன்றிணைதல் என்பன ஜனநாயகத்தின் தூண்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த விடயத்தை மாற்றுக் கருத்து கிடையாது என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
எனினும், இனக்குரோத அடிப்படையிலும், வன்முறைச் செயற்பாடுகளிலும் ஈடுபடுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.