கனடாவை அமெரிக்காவுடன் இணைக்காமல் விடமாட்டேன்; டிரம்ப் பிடிவாதம்
கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாற்றவேண்டும் என்பது குறித்து தான் தீவிர ஆர்வம் கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கனடாவை அமெரிக்காவை இணைப்பது குறித்து அவர் தெரிவித்துவரும் விடயங்கள் உண்மையா என்ற பொக்ஸ் நியுஸ் செய்தியாளரின் கேள்விக்கே ஆம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வருடாந்தம் 200 பில்லியன்டொலரை இழக்கின்றோம்
நாங்கள் வருடாந்தம் 200 பில்லியன்டொலரை கனடாவிடம் இழக்கின்றோம் என தெரிவித்துள்ள டிரம்ப் அது தொடர்வதற்கு அனுமதிக்கப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உண்மையாகவே கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கவிரும்புகின்றார் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வர்த்தக சமூகத்தினர் மத்தியில் தெரிவித்துள்ளார்.
அதோடு கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கும் டிரம்பின் ஆசை உண்மையானது என ட்ரூடோதெரிவித்துள்ளார்.
எங்கள் நாட்டை கைப்பற்றிஅமெரிக்காவுடன் இணைப்பது இலகுவான விடயம் என டிரம்ப் எண்ணுகின்றார் என ட்ரூடோ தெரிவித்துள்ளார். அதேசமயம் ஒலிவாங்கி செயற்பட்டுக்கொண்டிருந்ததை அறியாமல் கனடா பிரதமர் இதனை தெரிவித்தார்
பின்னர் ஒலிவாங்கி நிறுத்தப்பட்டது என கனடா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
டிரம்ப் கனடாவின் கனிமவளங்கள் மீது கண்வைத்துள்ளார் அவர்களிற்கு எங்கள் வளங்களை பற்றி தெரியும் எங்களிடம் என்ன உள்ளது என்பது தெரியும் . இதன் காரணமாகவே அவர்கள் எங்களை தங்களுடன் இணைந்து 51வது மாநிலமாக மாற்றுவது குறித்து பேசுகின்றனர் என தெரிவித்துள்ளார்