இந்தியா – கனடா சுதந்திர வர்த்தக உடன்படிக்கை குறித்து வெளியான தகவல்
கனடாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement) மீண்டும் ஆரம்பிப்பது தொடுர்பில் கனடா தீாமானம் எடுக்க வேண்டுமென இந்தியா தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்படுமா என இந்திய கனடாவிற்கான இந்திய உயர்ஸ்தானிகர் தினேஷ் பத்நாயக் விளக்கமளித்துள்ளார்.
“கனடா எங்களுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடத் தயார் எனில், நாங்கள் மகிழ்ச்சியுடன் இணைந்து செயல்படுவோம்,” என்று பத்நாயக் கூறினார்.
வர்த்தக உடன்படிக்கை
ஆனால் ஒப்பந்தத்தை நிறுத்தியது கனடா என்பதனால் மீண்டும் ஆரம்பிப்பதும் கனடாவின் பொறுப:பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்குமிடையே நம்பிக்கை மீண்டும் உருவாக்கப்பட வேண்டிய அவசியம் இருப்பதாகவும், முன்னாள் பிரதமர் மற்றும் பொலிஸார் வெளியிட்ட “அவசரமான மற்றும் நியாயமற்ற குற்றச்சாட்டுகள்” இப்போது “கடந்தது” என்று அவர் கூறினார்.
இதேவேளை, இந்தியா மற்றும் கனடா இடையே ஏற்கனவே வலுவான பொருளாதார உறவுகள் உள்ளன.
சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அவற்றை மேலும் வலுப்படுத்தும் ஒரு அமைப்பாக இருக்கும் என கனடா நிதி அமைச்சர் அனிதா ஆனந்த் கூறியுள்ளார்.