கனடாவில் அதிகரிக்கும் பாஸ்போர்ட் கட்டணங்கள்: அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு

Passport Canada
By Balamanuvelan Mar 13, 2026 07:32 AM GMT
Report

கனடாவில், பாஸ்போர்ட் மற்றும் சில புலம்பெயர்தல் ஆவணங்களுக்கான கட்டணங்கள், இம்மாதம், அதாவது, மார்ச் மாதம் 31ஆம் திகதி முதல் உயர இருப்பதாக கனடா புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

பணவீக்கம், சேவை டெலிவரி கட்டணங்கள் மற்றும் கனடாவின் சேவை கட்டண சட்டத்தின்படி இந்த கட்டண உயர்வு அமுலுக்கு வருவதாக கனடா அரசு தெரிவித்துள்ளது. 

கனடாவில் அதிகரிக்கும் பாஸ்போர்ட் கட்டணங்கள்: அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு | Canada Passport Documents Fees Rise From 31 March

கனடாவில் வாழ்வோருக்கான பாஸ்போர்ட் கட்டணங்களைப் பொருத்தவரை, 10 ஆண்டுகள் பயன்படுத்தப்படக்கூடிய வகையிலான பாஸ்போர்ட்டுக்கான கட்டணம், பெரியவர்களுக்கு 160 டொலர்களிலிருந்து 163.50 டொலர்களாக உயர்கிறது.

5 ஆண்டுகள் பயன்படுத்தப்படக்கூடிய வகையிலான பாஸ்போர்ட்டுக்கான கட்டணம், பெரியவர்களுக்கு 120 டொலர்களிலிருந்து 122.50 டொலர்களாக உயர்கிறது.

இந்த வகையிலான சிறுவர்களுக்கான பாஸ்போர்ட் கட்டணம், 57 டொலர்களிலிருந்து 58.50 டொலர்களாக உயர்கிறது.

கனடாவுக்கு வெளியே வாழ்பவர்களைப் பொருத்தவரை, 10 ஆண்டுகள் பயன்படுத்தப்படக்கூடிய வகையிலான பாஸ்போர்ட்டுக்கான கட்டணம், பெரியவர்களுக்கு 260 டொலர்களிலிருந்து 266.25 டொலர்களாக உயர்கிறது. 

கனடாவில் அதிகரிக்கும் பாஸ்போர்ட் கட்டணங்கள்: அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு | Canada Passport Documents Fees Rise From 31 March

5 ஆண்டுகள் பயன்படுத்தப்படக்கூடிய வகையிலான பாஸ்போர்ட்டுக்கான கட்டணம், பெரியவர்களுக்கு 190 டொலர்களிலிருந்து 194.25 டொலர்களாக உயர்கிறது.

இந்த வகையிலான சிறுவர்களுக்கான பாஸ்போர்ட் கட்டணம், 100 டொலர்களிலிருந்து 102.50 டொலர்களாக உயர்கிறது.

மேலும், பெரியவர்களுக்கான அகதி பயண ஆவணக் கட்டணம், 120 டொலர்களிலிருந்து 122.50 டொலர்களாகவும், பெரியவர்களுக்கான certificate of identity கட்டணம், 260 டொலர்களிலிருந்து 266.25 டொலர்களாகவும் உயர இருக்கிறது.

கனேடியர்கள் அவசரமாக பாஸ்போர்ட் பெற விரும்பினால், அதற்கான ‘அவசர’ கட்டணம், 110 டொலர்களிலிருந்து 125.75 டொலர்களாக உயர இருக்கிறது.

கனடாவின் சேவை கட்டண சட்டத்தின்படி (The Service Fees Act), பணவீக்கத்துக்கேற்ப, சில கட்டணங்களை ஆண்டுதோறும் அதிகரிக்க அனுமதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US