இந்தியர்களை இனரீதியாக விமர்சித்த கனேடிய பெண்: பொலிசார் எடுத்துள்ள நடவடிக்கை
இந்தியர்களைக் குறிவைத்து இனவெறுப்பு செயலில் ஈடுபட்ட கனேடிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவின் கிரேட்டர் ரொரன்றோ பகுதியில், Mississauga நகரில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா ஒன்றில், இந்தியர்களை இனரீதியாக மோசமாக விமர்சிக்கும் வாசகம் ஒன்று எழுதப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்த விடயம் தொடர்பில் Freda Looker-Rilloraza (29) என்னும் கனேடியப் பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.
கனடாவில் சமீப காலமாக, இந்தியர்களுக்கு எதிரான இனவெறுப்பு அதிகரித்துவருகிறது. சமீபத்தில், இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே இனவெறுப்பு தாக்குதலுக்கு உள்ளானார்.
இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினரான ஹர்தீப் க்ரேவால் (Hardeep Grewal), தனது குடும்பத்துடன் Muskoka என்னுமிடத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, சிலர் அவரை இனரீதியாக மோசமாக விமர்சித்ததுடன், உன் நாட்டுக்குத் திரும்பிப் போ என்றும், நீங்களெல்லாரும் சாகவேண்டும் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.