கனடாவின் மக்கள் தொகை 41.5 மில்லியனாக உயர்வு
கனடாவின் மொத்த மக்கள் தொகை 2025 ஜனவரி 1 நிலவரப்படி 41,528,680 ஆக உயர்ந்துள்ளது என கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த மூன்று மாதங்களில் (அக்டோபர் 1, 2024 முதல் ஜனவரி 1, 2025 வரை) மக்கள் தொகை 63,382 அதிகரித்துள்ளது.
வளர்ச்சி வீதம் 0.2% ஆக உள்ளது, இது 2020ம் ஆண்டில் கொரோனா-related பயணக் கட்டுப்பாடுகளுக்கு பின்னர் மிகக் குறைந்த வளர்ச்சியாகும்.
2023 மூன்றாம் காலாண்டில் (Q3 2023), மக்கள் தொகை மிக வேகமாக அதிகரித்துள்ளது.
இப்போது, வளர்ச்சி வீதம் மந்தமடைந்து வருகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மூன்றாண்டுகளில் பணிநிலை குடியேறிகள் (Non-Permanent Residents - NPR) தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இப்போது முதல் முறையாக குறைந்துள்ளது.
2024 அக்டோபர் 1க்கு ஒப்பிடும்போது, 2025 ஜனவரி 1க்குள் 28,341 பணிநிலை குடியேறிகள் குறைந்துள்ளனர்.
2024ம் ஆண்டில் மொத்தம் 744,324 பேர் கனடாவில் குடியேறியுள்ளனர்.