கனடிய தபால் திணைக்களம் எதிர்நோக்கும் நெருக்கடி
கனடிய தபால் திணைக்களம் பாரியளவு நட்டத்தை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் தபால் திணைக்களப் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் காரணமாக போட்டி நிறுவனங்களிடம் சேவை பெற்றுக்கொள்ள மக்கள் உந்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது சுமார் 8 மில்லியன் பொதிகள் வேறும் சேவைகள் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதனால் கனடிய தபால் திணைக்களம் பாரியளவு நட்டத்தை எதிர்நோக்க நேரிடலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தொழிற்சங்கப் போராட்டம் இன்னமும் முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லை.
சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.