கனடிய தபால் திணைக்களம் மீண்டும் தொழிற்சங்கப் போராட்டத்தில்…
மத்திய அரசாங்கம் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் பெரும்பாலான வீடுகளில் வீடு தோறும் தபால் விநியோகத்தை நிறுத்தும் திட்டத்தை அறிவித்த சில மணி நேரங்களிலேயே, கனடா தபால் தொழிற்சங்கம் நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது.
எங்கள் தபால் சேவையும் தொழிலாளர்களையும் பாதிக்கும் அரசின் முடிவுக்கு எதிராக, உடனடியாக கனடா தபால் திணைக்களத்தில் பணிபுரியும் எங்கள் அனைத்து உறுப்பினர்களும் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர் என தெரிவித்துள்ளது.
வேலைநிறுத்தம் நீடிக்கும் வரை புதிய கடிதங்கள் மற்றும் பொதிகள் ஏற்கப்படமாட்டாது எனவும், சில தபால் அலுவலகங்கள் மூடப்படும் எனவும் கனடா தபால் பேச்சாளர் லிசா லியூ கூறியுள்ளார்.
அரச நலத் தொகை காசோலைகள் மற்றும் ஏற்கனவே உள்ள உயிருடன் கொண்டுசெல்லப்படும் விலங்குகள் மட்டுமே விநியோகிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைநிறுத்தம் குறிப்பாக விடுமுறை கால பார்சல் விநியோகத்துக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று சிறு தொழில் சங்கங்கள் மற்றும் வணிக அறைகள் கவலை தெரிவித்துள்ளன.
கடந்த ஆண்டு நடந்த வேலைநிறுத்தம் மட்டும் சிறு தொழில்களுக்கு 1 பில்லியன் டாலருக்கும் மேல் இழப்பை ஏற்படுத்தியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.