கியூபெக்கில் பயங்கர விபத்து: 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் பாதிப்பு
கியூபெக் மாகாண பெருந்தெருவொன்றில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது
40ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ட்ரக் வண்டியொன்று மோதியதில் சுமார் 150 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கியூபெக் மாகாண போக்குவரத்து அமைச்சர் இந்த விடயம் பற்றி அறிவித்துள்ளார்.
மொத்தமாக 150 வாகனங்கள் வரையில் விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்து காரணமாக குறித்த அதிவேக நெடுஞ்சாலையின் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.
எனினும் இந்த விபத்தில் உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.