தவறவிட்ட சந்தர்ப்பங்கள் ; உலகக் கிண்ண முதல் போட்டியில் கனடா தோல்வி
உலகக் கிண்ண போட்டித் தொடரின் முதல் போட்டியில் கனேடிய அணி, பெல்ஜியம் அணியிடம் தோல்வியடைந்துள்ளது.
ஒன்றுக்கு பூச்சியம் என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணி கனடாவை வீழ்த்தியுள்ளது. பெல்ஜியம் அணியின் சார்பில் மிச்சி பாட்சூயாயி கோல் போட்டார்.
முதல் பாதியில் கனடா அணிக்கு நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கப் பெற்ற போதிலும் அது வெற்றியளிக்கவில்லை.
கனடாவின் நட்சத்திர வீரர் Alphonso Davies க்கு கிடைக்கப் பெற்ற அரிய சந்தர்ப்பம் கைநழுவப்பட்டது.
பெல்ஜிய அணி வீரரின் ஹேன்ட் போல் தவறு காரணமாக கிடைக்கப் பெற்ற பெனல்டி உதையை டேவிஸ் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
முதல் 45 நிமிடங்களில் கனேடிய கோல் நோக்கி 14 சூட்கள் செய்த போதிலும், பெல்ஜியம் 4 சூட்கள் மேற்கொண்டது.
இரண்டாம் பாதியில் இரண்டு அணிகளும் கடுமையான பலப்பரீட்சை மேற்கொண்டிருந்தன.
இறுதி வரையில் போராடிய கனடாவினால் ஒரு கோல் போடப்படுவதனை தடுக்க முடியவில்லை.
எவ்வாறெனினும், கடுமையான போட்டிக்கு பெல்ஜியம் கனடாவை தோற்கடித்துள்ளது.
கனடா போட்டியிடும் F பிரிவில் இறுதி இடத்தையே கனடா வகிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.