உலகின் அமைதியான நாடுகளின் பட்டியலில் கனடாவுக்கு கிடைத்த அந்தஸ்து
2025 ஆண்டிற்கான உலகின் அமைதியான நாடுகள் பட்டியல் வெளியாகியுள்ளதுடன், கனடா 14 ஆவது இடத்தை பெற்றுள்ளது.
கடந்தாண்டு 1.449 புள்ளிகளுடன் 11ஆவது இடத்தில் இருந்த நிலையில், இந்தாண்டு 1.491புள்ளிகளை பெற்று 14 ஆவது இடத்தை பெற்றுள்ளது.
வெளியான பட்டியல்
பொருளாதார மற்றும் அமைதிக்கான நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உலகின் அமைதியான நாடுகள் பட்டியலை வெளியிடும். இந்தாண்டிற்கான அமைதி பட்டியல் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.
உலக மக்கள் தொகையில் 99.7% உள்ளடக்கிய 163 நாடுகளை ஆய்வு செய்து இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தாண்டும் இந்த பட்டியலில் வழக்கம் போல ஐரோப்பிய நாடுகளே முன்னிலையில் உள்ளன.
முதல் ஐந்து இடங்களை ஐஸ்லாந்து (1.095), அயர்லாந்து (1.260), நியூசிலாந்து (1.282), ஆஸ்திரியா (1.294) சுவிட்சர்லாந்து (1.294) போன்ற நாடுகள் முறையே பெற்றுக் கொண்டுள்ளன.
இதில் அமெரிக்கா 2.443 புள்ளிகளுடன் 128 இடத்தில் உள்ளது.