கனடாவில் கடுமையான குளிர் குறித்து எச்சரிக்கை
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், கனடாவின் மேற்குப் பகுதியிலிருந்து அமெரிக்க கிழக்குக் கடற்கரை வரை “பூமியிலேயே மிகத் தீவிரமான குளிர்ப் பகுதி” உருவாகும் என அமெரிக்காவின் எம்.ஐ.ரீ பல்கலைக்கழக வானிலை ஆய்வாளர் ஜூடா கோஹென் எச்சரித்துள்ளார்.
டிசம்பர் மூன்றாவது வாரத்தில் (கிறிஸ்துமசுக்கு சற்று முன்) கனடா முதல் அமெரிக்க கிழக்குக் கடற்கரை வரை அசாதாரணமான, “அதி தீவிர குளிர்” (extreme cold) பரவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் அவர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடனான கணிப்பின் ஊடாக இந்த விடயத்தை தெரிவித்திருந்தார்.

சைபீபீரியாவை விட குளிராக இருக்கும் என்று சொல்லவில்லை; ஆனால் அந்தப் பகுதிகளுக்கு இயல்பை விட மிகவும் கடுமையான குளிராக இருக்கும்” என பொருள் என கோஹென் தெளிவுபடுத்தினார்.
போலார் வார்டெக்ஸ் (வடதுருவ சுழற்காற்று) “ரப்பர் பேண்ட் போல” நீண்டு இழுக்கப்படுவதால் (stretch pull) சைபீரியாவில் உறைந்த குளிர்க் காற்று முதலில் கனடாவுக்கும் பின்னர் அமெரிக்காவுக்கும் பாய்கிறது. இதுபோன்ற “ஸ்ட்ரெட்ச்” நிகழ்வுகள் டிசம்பர் முழுவதும் மீண்டும் மீண்டும் வரலாம் என்று கோஹென் எச்சரிக்கை விடுத்துள்ளார்.