எரிபொருளுக்காக கூடுதல் தொகையை செலவிடும் நாடுகளின் வரிசையில் கனடாவின் நிலை!
எரிபொருளுக்காக கூடுதல் தொகைகளை செலவிடும் நாடுகளின் வரிசையில் கனடா முன்னணி வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜீ7 நாடுகளில் கனேடிய மக்களே தங்களது வருமானத்தில் கூடுதல் தொகையை செலவிடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனேடிய மக்கள் தங்களது மொத்த வருமானத்தில் 4.4 வீதமான தொகையை எரிபொருளுக்காக செலவிடுகின்றனர்.
பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த மக்கள் குறைந்தளவில் எரிபொருளுக்காக செலவிடுகின்றனர்.
பிரான்ஸ் மக்கள் தங்களது மொத்த வருமானத்தில் எரிபொருளுக்காக 0.7 வீதத்தினையே செலவிடுகின்றனர்.
உலகின் பெற்றோல் விலை தர வரிசையில் கனடா 68ம் நிலையை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை சராசரியாக 2 டொலர்களாக விற்பனை செய்பய்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.