அமெரிக்காவை கடுமையாக எதிர்க்கும் கனடா
அமெரிக்க அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கடுமையாக எதிர்ப்பதாக கனடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
கிரீன்லாந்து மீதான அமெரிக்க வரிகளை கடுமையாக எதிர்ப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நெரு்கடியான தருணத்தில் கிரீன்லாந்துக்கு கனடா ஆதரவாக துணை நிற்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தில் (World Economic Forum) அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொருளாதார அழுத்தம் மற்றும் வரிகளை மூலமாகப் பயன்படுத்துவது குறித்து தெளிவான செய்தி அளித்தாலும், அமெரிக்கா அல்லது அமெரிக்க ஜனாதிபதியை கார்னி நேரடியாக குறிப்பிடவில்லை.
நடுத்தர சக்திகளான நாடுகளுக்கு தற்போது ஒரு சோதனை நேரிடுகிறது என தெரிவித்துள்ளார்.
அண்மைய காலங்களில், பெரிய சக்திகள் பொருளாதார ஒருங்கிணைப்பை ஆயுதமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வரிகள் மூலமாக அழுத்தம், நிதி அமைப்புகள் மூலம் கட்டுப்பாடு, விநியோக சங்கிலிகளை கட்டுப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் இடையூறுகள் ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
கார்னியின் 17 நிமிட முதன்மை உரை, பிரதமராக பதவி ஏற்றுக்கொண்ட பின் உலக பொருளாதார மன்றத்தில் அவர் வழங்கிய முதல் உரையாகும்.
நடுத்தர சக்திகளான நாடுகள் எப்படி 21 ஆம் நூற்றாண்டின் பொருளாதார மற்றும் அரசியல் சவால்களை கையாள வேண்டும் என்பதில் அவரது கருத்துக்கள் முக்கியத்துவம் கொண்டதாக இருந்தது.