சீன வாகனங்கள் மீதான வரியை அதிகரிக்கும் கனடா
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் வரியை அதிகரிப்பதற்கு கனடா திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே அமெரிக்க அரசாங்கம், சீன வாகனங்கள் மீது கூடுதல் வரியை அண்மையில் விதித்திருந்தது.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இலத்திரனியல் வாகனங்களுக்கு இவ்வாறு புதிய வரி அதிகரிப்பு அமெரிக்காவில் அறிவிக்கப்பட்டது.
அமெரிக்காவின் இந்த தீர்மானத்திற்கு இணைவாக கனடாவிலும் சீன இலத்திரனியல் வாகன இறக்குமதிக்கு வரி விதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி சீன இலத்திரனியல் வாகனங்களின் மீதான இறக்குமதி வரி 6.1 வீதமாக அதிகரிக்கப்பட உள்ளது.
இதேவேளை, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்கு மற்றும் அலுமினிய உற்பத்திகளுக்கான இறக்குமதி வரியும் 25 வீதமாக உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் அக்டோபர் மாதம் 15 ஆம் திகதி இந்த வரி அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வட அமெரிக்காவின் மோட்டார் வாகன சந்தையை பலப்படுத்தும் நோக்கில் சீன வாகனங்களுக்கான வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப்படுவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.