இந்திய அமெரிக்க மருத்துவர்கள் குழு கனடாவுக்கு விடுத்துள்ள கோரிக்கை
இந்திய அமெரிக்க மருத்துவர்கள் குழு ஒன்று, கடந்த ஆண்டு கனடா வாங்கிய 5,000 வெண்டிலேட்டர்கள் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலையில், அவற்றை இந்தியாவுக்கு வழங்கக்கோரி கனடா அரசுடன் பேச்சு வார்த்தை ஒன்றைத் துவக்கியுள்ளது.
இந்திய வம்சாவளி மருத்துவர்களின் அமெரிக்க கூட்டமைப்பின் தலைவரான மருத்துவர் சுதாகர் கூறும்போது, நாங்கள் கனடா அரசுடன் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறோம்.
அவர்களிடம் சுமார் 5,000 வெண்டிலேட்டர்கள் உள்ளன. அவை தற்போது கனடா செஞ்சிலுவைச் சங்கத்திடம் உள்ளன, கொரோனா உச்சத்திலிருக்கும் நிலையில், அவற்றை செஞ்சிலுவைச் சங்கம் வாயிலாக இந்தியாவுக்கு கொடுக்குமாறு கனடாவை வலியுறுத்துகிறோம் என்றார்.
கனடா தங்கள் கோரிக்கைக்கு செவிமடுத்து அந்த வெண்டிலேட்டர்களை இந்தியாவுக்கு வழங்கும் என தாங்கள் நம்புவதாக சுதாகர் தெரிவித்துள்ளார்.