உக்ரனுக்கு ஆயதங்களை வழங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்த கனடா
உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் ஒப்பந்தத்தை கனடா அதிகாரபூர்வமாக ரத்து செய்துள்ளது.
புதுப்பிக்கப்பட்ட இலகுரக கவச வாகனங்களை (Light Armoured Vehicles) வழங்கும் ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மெக்ஜின்டி பாராளுமன்றக் குழுவில் தெரிவித்தார்.
ஒப்பந்தத்தின் நிதி விவரங்களை கனடிய காமர்ஷியல் கார்ப்பரேஷன் (Canadian Commercial Corporation - CCC) என்ற அரசுக் கழகம் மேற்கொள்ள வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.
ஒப்பந்தத்தின் மதிப்பு 250 மில்லியன் கனடிய டாலர் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டது.
ஆனால், அந்தத் திட்டம் கடந்த கோடைக்காலத்திற்குப் பிறகு அரசு அறிக்கைகளில் இருந்து திடீரென நீக்கப்பட்டதால், அதன் நிலைமை குறித்து சந்தேகம் எழுந்தது.
இன்றுவரை அந்த ஒப்பந்தத்தின் நிலை குறித்து பாதுகாப்புத் துறை அல்லது சீ.சீ.சீ எந்த விளக்கமும் வழங்கவில்லை.
அந்த நிறுவனத்துடன் இருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என பாதுகாப்பு அமைச்சர் மெக்ஜின்டி தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானத்திற்கான காரணங்களை இப்போது விவரிக்க முடியாது என மேலும் குறிப்பிட்டுள்ளார்.