கனடா - உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர்களுக்கு இடையே சந்திப்பு!
கனேடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்துக்கும் (Anita Anand) உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் (Oleksii Reznikov) இடையில் மூடிய கதவு பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளது.
குறித்த பேச்சுவார்த்தை சுமார் இரண்டு மணித்தியாலங்கள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பேரழிவினை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்ளை வழங்குமாறு உக்ரைன் விடுத்து வரும் கோரிக்கைக்கு இதுவரையில் கனடா பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலைகள் குறித்து இச் சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. உக்ரைன் எல்லைப் பகுதியில் ஒரு லட்சம் படையினரை ரஷ்யா குவித்துள்ள பின்னணியில் இந்தப் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளது.
உக்ரைன் பாதுகாப்பு அமைச்சருடன் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் பற்றிய விபரங்களை கனேடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் ஊடகங்களுக்கு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.