அமெரிக்க அதிகாரிகளை தாக்கியதாக கனேடிய பெண் எல்லையில் கைது
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற ஒரு கனேடிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
லிண்ட்சே (Lindsay Anne Moffatt) என்னும் கனேடிய பெண், கஞ்சா புகைக்கும் கருவி ஒன்றை வைத்திருந்ததால் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஆனால், அவர் இரு நாட்டவர்களும் சந்திக்கும் எல்லை வழியாக மீண்டும் அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றதாக அமெரிக்க எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அப்போது லிண்ட்சேயை தாங்கள் கைது செய்ய முயன்றதாகவும், கைது செய்யப்படுவதை அவர் எதிர்த்ததாகவும், பெண் அதிகாரி ஒருவரை முகத்தில் மிதித்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டியுள்ளனர் அமெரிக்க அதிகாரிகள்.
ஆனால், தான் தன் காதலரை சந்திக்க எல்லைக்குச் சென்றதாகவும், தன் நாயை அவரிடமிருந்து திரும்பப் பெற்றுக்கொள்வதற்காகவே தான் சென்றதாகவும், யாரையும் வேண்டுமென்றே தாக்கும் நோக்கம் தனக்கு இருக்கவில்லை என்றும் கூறியுள்ளார் லிண்ட்சே.