லொட்டரியால் ஒரே நாளில் கோடீஸ்வரியாகிய கனேடிய பெண்ணின் ஆசை
கனேடிய பெண்ணொருவர், சிறு படகொன்றை வாங்குவதற்காக சென்றபோது வாங்கிய லொட்டரி அவரை ஒரே நாளில் கோடீஸ்வரியாக்கிவிட்டது.
கனடாவின் கால்கரியைச் சேர்ந்த Pam Millage, kayak என்னும் சிறு படகொன்றை வாங்கச் சென்றுள்ளார்.
அப்போது அவர் ஒரு லொட்டரிச்சீட்டும் வாங்கியுள்ளார். உடனடியாக சுரண்டிப்பார்த்து பரிசு விழுந்ததா என கண்டறியும் அந்த லொட்டரியை வாங்கி, தனக்கு ஏதாவது பரிசு விழுந்துள்ளதா என பார்த்த Pamக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.
ஆம், Pam வாங்கிய லொட்டரிச்சீட்டுக்கு ஒரு மில்லியன் கனேடிய டொலர்கள் பரிசு விழுந்துள்ளது.
ஒரு மில்லியன் கனேடிய டொலர்கள் என்பது இலங்கை மதிப்பில் 21,95,00,244.00 ரூபாய் ஆகும்.
ஒரே நாளில் கோடீஸ்வரியாகிவிட்டாலும், இப்போதைக்கு பெரிதாக திட்டங்கள் எதுவும் இல்லை என்கிறார் Pam.
சமீபத்தில்தான் தனது மகனுடைய கார் பழுதானதாகவும், அதனால் மகனுக்கு உதவி செய்ய இருப்பதாகவும், கணவருடன் வெளிநாட்டு சுற்றுலா செல்லும் ஆசை உள்ளதாகவும் மட்டும் தெரிவித்துள்ளார் Pam.