கனடாவில் அவசரகால எச்சரிக்கை குறித்த அறிவிப்பு
கனடாவில் நாடு முழுவதும் உள்ள மக்கள் இன்றைய தினம் அவசரகால எச்சரிக்கை அமைப்பின் உரத்த எச்சரிக்கை ஒலியைக் கேட்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பை இயக்கும் பெல்மோரெக்ஸ் நிறுவனம், தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணக்கமான வயர்லெஸ் சாதனங்களில் சோதனைச் செய்தியும் எச்சரிக்கை ஒலியும் ஒலிபரப்பப்படும் என்று தெரிவித்துள்ளது.
நாட்டின் அனைத்து மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களிலும் காலை முதல் பிற்பகலுக்குள் குறிப்பிட்ட நேரங்களில் இந்தச் சோதனைச் செய்திகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அவசரகால எச்சரிக்கை அமைப்பு சரியாகச் செயல்படுவதை உறுதி செய்யவும், பொதுமக்களிடையே இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் மே மற்றும் நவம்பர் மாதங்களில் இவ்வாறு சோதனை செய்யப்படுகிறது.
இந்தச் சோதனைச் செய்திகளையோ அல்லது உண்மையான அவசரகால எச்சரிக்கைகளையோ தவிர்க்கும் வசதி பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி வரை மட்டும், ஆம்பர் அலர்ட், சூறாவளி மற்றும் இடியுடன் கூடிய மழை உள்ளிட்ட பல்வேறு அவசரநிலைகளுக்காக கனடாவில் மொத்தம் 1,215 எச்சரிக்கைகள் இந்த அமைப்பின் மூலம் விடுக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாகாணம் மற்றும் பிராந்தியத்திற்கும் இந்தச் சோதனை நடைபெறும் குறிப்பிட்ட நேர விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.