பயங்கரவாதச் செயல்பாட்டிற்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டவர் படையில் இருந்து நீக்கம்!
கனடாவில் பயங்கரவாதச் செயல்பாடுகளுக்கு வசதி செய்து கொடுத்ததாகக் கடந்த ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட கியூபெக் பிராந்தியத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தற்போது கனடிய ஆயுதப்படையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மார்க்-அவுரேல் சாபோட் என்பவரது பட விலகல் குறித்தான மேலதிக விவரங்களை வழங்கத் தேசிய பாதுகாப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஷெரில் ஃபாரஸ்ட் மறுத்துவிட்டார்.
இந்தத் தகவல்கள் 'தனியுரிமைச் சட்டத்தின்' கீழ் பாதுகாப்பக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கியூபெக் சிட்டி பகுதியில் அரசிற்கு எதிரான தீவிரவாதச் சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, ஜூலை 2025 இல் ராயல் கனடியன் மவுண்டட் பொலிஸாரால் குற்றம் சாட்டப்பட்ட மூவரில் சாபோட்டும் ஒருவர் ஆவார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான ஒரு ஆயுதப் படையை உருவாக்கத் திட்டமிட்டதாகவும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு வசதி செய்யத் தேவையான தீவிர நடவடிக்கைகளை எடுத்ததாகவும் பொலிஸ் திணைக்களம் குற்றம் சாட்டியிருந்தது.
இதே வழக்கில் ஆயுதக் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள நான்காவது சந்தேக நபர், இன்னமும் கனடிய ஆயுதப்படையில் உறுப்பினராக தொடர்கிறார்; எனினும் அவர் இராணுவப் பணிகளைச் செய்யவில்லை என்பதை செய்தித் தொடர்பாளர் ஃபாரஸ்ட் உறுதிப்படுத்தியுள்ளார்.