புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்த கனேடிய நகரங்கள்
கனடாவின் முதன்மை நகரங்கள் பல இந்த முறையும் புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்து, இணையமூடாக எளிமையாக கொண்டாட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடா முழுவதும் இந்தமுறையும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இணையமூடாக முன்னெடுக்கப்படுகிறது. இந்த புத்தாண்டு கொரோனா மாறுபாடான ஓமிக்ரான் பரவலுடன் கனேடிய மக்கள் கொண்டாட உள்ளனர்.
பொதுவாக Nathan Phillips சதுக்கத்தில் திரண்டு புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடவேண்டிய தருணத்தில், தற்போது முன்னரே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் இணையமூடாக ஒளிபரப்பப்படுகிறது.
ரொறன்ரோ மக்கள் கொரோனா பரவலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு, புத்தாண்டு கொண்டாட்டங்கள் அனைத்தும் இணையமூடாக முன்னெடுக்கப்படுகிறது. Nathan Phillips சதுக்கம் அல்லது CN டவரில் இந்தமுறை வாணவேடிக்கை நடத்தப்படாது என்றே கூறப்படுகிறது.
ஆனால் ரொறன்ரோ ஏரி அருகாமையில் முன்னெடுக்கப்படுவதாகவும், மக்கள் எங்கிருந்தாலும் இந்த நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
முன்கள ஊழியர்களுக்கு ஆதரவாக குறித்த நிகழ்ச்சிகள் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இதனிடையே Mississauga நகரில் இந்தமுறை எந்த கொண்டாட்டங்களும் இருக்காது என்றே அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் கூட்ட எண்ணிக்கையை கட்டுப்படுத்த உள்ளனர். உள அரங்கத்தில் ஒன்று திரளும் மக்களில் 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக முழுமையாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.