166 இளம்பெண்களை கொலை செய்ததாக கூறும் கனேடியர்... திரில்லர் திரைப்படத்தை மிஞ்சிய ஒரு செய்தி

Canada investigation killed teenagers
By Balamanuvelan Oct 13, 2021 09:23 AM GMT
Report

அமெரிக்க நெடுஞ்சாலைகளில் தொடர்ச்சியாக எட்டு பெண்கள் கொல்லப்பட்ட நிலையில், ஒவ்வொரு கொலைக்கும் பின், தான்தான் அவர்களைக் கொன்றதாக பொலிசாருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் ஒரு நபர் கடிதங்களை அனுப்பிக்கொண்டிருந்தார்.

அந்த கடிதங்களில் கையெழுத்து இடவேண்டிய இடத்தில் சிரிக்கும் முகம் ஒன்று வரையப்பட்டிருந்ததால், அந்த மர்ம நபர் ’சிரிக்கும் முக கொலையாளி’ என அழைக்கப்பட்டார்.

1995ஆம் ஆண்டு Julia Ann Winningham என்ற இளம்பெண் கொல்லப்பட்டார். பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த அவரது காதலரான Keith Jesperson (66) என்பவர் கைது செய்யப்பட்டார்.

M. William Phelps என்ற ஊடகவியலாளர் Jespersonஇன் நண்பராக நடித்து அவருடன் தொடர்புகொண்டிருக்கிறார். அவரிடம் Jesperson தான் செய்த கொலைகளைக் குறித்து விவரமாக கூறியிருக்கிறார்.

அதன் பிறகுதான், இந்த Jespersonதான் அந்த ’சிரிக்கும் முக கொலையாளி’ என்பது தெரியவந்துள்ளது.

166 இளம்பெண்களை கொலை செய்ததாக கூறும் கனேடியர்... திரில்லர் திரைப்படத்தை மிஞ்சிய ஒரு செய்தி | Canadian Claims To Have Killed Teenagers

சிறு வயதில் Jespersonஇன் தந்தை அவரை பெல்ட்டால் அடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஒரு சாடிஸ்ட் போல மகனை அடிப்பதில் அவர் இன்பம் காண, பிந்நாட்களில் அவரது மகன், பெண்களை கொலை செய்வதில் இன்பம் கண்டிருக்கிறார்.

திருமணமாகி புது வாழ்க்கை தொடங்கி விட்டது என்று எண்ணிக்கொண்டிருந்த நிலையில், Jespersonஇன் மனைவியான Rose Huck, அவருடனான தாம்பத்திய உறவைத் தவிர்க்கத் தொடங்கியதுடன், அவரை அவமானப்படுத்தும் வகையில் பாலியல் உறவுக்காக அவர் அலைவதாக மோசமாக திட்டியிருக்கிறார். அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவேறு Rose சந்தேகிக்க, இருவருக்கும் இடையிலான திருமணம் முடிவுக்கு வந்துள்ளது.

விவாகரத்து ஆனதால் Jesperson பெண்கள் மீது கடும் கோபத்திலிருந்த நிலையில், Taunja Bennett (23) என்ற பெண்ணுடைய நட்பு கிடைத்திருக்கிறது. ஆனால், அவரும் Roseஐப் போலவே பாலியல் உறவுக்காக Jesperson அலைவதாக விமர்சிக்க, ஆத்திரமடைந்த Jespersonக்கு தன் மனைவியின் முகம்தான் ஞாபகம் வந்திருக்கிறது. ஆகவே, Taunjaவை அடித்து உதைத்து கழுத்தை நெறித்துக் கொன்று, கைரேகை எதுவும் தெரியாதவகையில் அவரது உடையின் பொத்தான்களைக் கூட அகற்றிவிட்டு தன் பயணத்தைத் தொடர்ந்திருக்கிறார்.

166 இளம்பெண்களை கொலை செய்ததாக கூறும் கனேடியர்... திரில்லர் திரைப்படத்தை மிஞ்சிய ஒரு செய்தி | Canadian Claims To Have Killed Teenagers

இதற்கிடையில், Taunjaவின் கொலையை வேறொரு தம்பதியர் ஒத்துக்கொண்டு சிறை செல்ல, Jespersonக்கு தைரியம் வந்து விட்டது. தொடர்ந்து பல பெண்களை, குறிப்பாக தனியாக வாழும் பெண்கள் மற்றும் பாலியல் தொழிலாளிகளை வன்புணர்ந்து கொலை செய்துவிட்டு அடையாளம் தெரியாத வகையில் உடலை சிதைத்து வீசிவிட்டு சென்றிருக்கிறார் Jesperson.

தான் கிட்டத்தட்ட 166 பெண்களைக் கொலை செய்துள்ளதாக Jesperson கூறினாலும், எட்டு பெண்களுடனான அவரது தொடர்பை மட்டுமே பொலிசாரால் நிரூபிக்க முடிந்துள்ளது.

தான் செய்த கொடூர கொலைகளைக் குறித்து ஊடகவியலாளர் Williamஇடம் கூறும்போது கூட, சிரித்த முகத்துடன் கதை சொல்வதுபோல விவரிப்பாராம் Jesperson.

166 இளம்பெண்களை கொலை செய்ததாக கூறும் கனேடியர்... திரில்லர் திரைப்படத்தை மிஞ்சிய ஒரு செய்தி | Canadian Claims To Have Killed Teenagers

அந்த பெண்கள் பாவம், அவர்கள் படும் துயரத்திலிருந்து அவர்களை விடுவிப்பதற்காகத்தான் அவர்களை கொலை செய்தேன் என்பது போலவே பேசுவாராம் அவர்.

Jespersonதான் ’சிரிக்கும் முக கொலையாளி’ என்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, அவருக்கு பல ஆயுள் தண்டனைகள் விதிக்கப்படுள்ளன.

இதற்கிடையில், இப்போதும் Jesperson ஊடகவியலாளர் William தன் நண்பர் என எண்ணிக்கொண்டிருக்க, போதுமடா சாமி, இனி அவரிடம் பேசமாட்டேன் என்று கூறிவிட்டார் William!  

166 இளம்பெண்களை கொலை செய்ததாக கூறும் கனேடியர்... திரில்லர் திரைப்படத்தை மிஞ்சிய ஒரு செய்தி | Canadian Claims To Have Killed Teenagers

166 இளம்பெண்களை கொலை செய்ததாக கூறும் கனேடியர்... திரில்லர் திரைப்படத்தை மிஞ்சிய ஒரு செய்தி | Canadian Claims To Have Killed Teenagers


மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US