ட்ரம்ப்பின் பரஸ்பர வரிவிதிப்பு தொடர்பில் கனடா பிரதமர் மார்க் கார்னி
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் பரஸ்பர வரிவிதிப்பு அமெரிக்கா மட்டுமின்றி, சர்வதேச அளவில் வணிகப் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே தற்போதைய சூழலில் பொருளாதாரத்திற்கு ஆபத்தாக இருப்பது ட்ரம்ப் தான் என்ற விமர்சனத்தை கனடா பிரதமர் மார்க் கார்னி முன்வைத்துள்ளார்.
மேலும், ட்ரம்பின் செயற்பாடுகள் மீது கடுமையான விமர்சனங்களையும் அவர் முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில் ,
"இப்போது ட்ரம்ப் ஒரு வர்த்தகப் போரை ஆரம்பித்துள்ளார். இந்த வர்த்தகப் போரை எதிர்கொள்ளவும் கனடாவின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு மாகாணங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு முக்கியமானது.
வர்த்தகப் போரைப் பொறுத்தவரை அமெரிக்காவுக்குப் பதிலடி தரும் வகையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் $60 பில்லியனுக்கும் அதிகமான பொருட்களுக்கு கனடா பரஸ்பர வரியை விதித்துள்ளது.
இந்த வர்த்தகப் போரில் நிச்சயம் பின்வாங்க மாட்டோம்" என்றார்.