சர்ச்சையில் சிக்கிய கனடா எம்.பி!
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் தற்செயலாக ஜும் கால் சந்திப்பின் போது, எதிர்பாரதவிதமாக ஆடையின்றி தோன்றிய நிலையில் , அதற்கு அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.
கனடா லிபரல் பார்ட்டியின்( Liberal Party) நாடாளுமன்ற உறுப்பினரான William Amos(46)-ன் புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தது.
அதில், அவர் ஆடையின்றி இருப்பது போன்றும், அவருக்கு பின்னால் கனடா நாட்டின் கொடி மற்றும் Quebec நகரின் கொடி இருந்தது. இது குறித்து உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், கனடாவின் Liberal Party நாடாளுமன்ற உறுப்பினரான William Amos அவர்கள், House of Commons மாநாட்டிற்கான ஜும் அழைப்பில், ஆடையின்றி தோன்றினார்.
அதில், Quebec நகரின் கொடி மற்றும் கனடாவின் கொடிகளுக்கு மத்தியில், மொபைல் போன் ஒன்றை கையில் பிடித்தபடி அதில் இருந்தார்.
இது எப்படி என்பது குறித்து William Amos விளக்கம் கூறுகையில்,
நான் மிகவும் துரதிர்ஷ்டவசமாக இந்த தவறை செய்துவிட்டேன். இதனால், நான் வெளிப்படையாக வெட்கப்படுகிறேன். ஜாக்கிங் சென்றுவிட்டு வந்து உடைகளை மாற்றிய போது, அது தற்செயலாக கமெராவில் தெரிந்துவிட்டது. இது தற்செயலாக நடந்தது என கூறியுள்ளார்.
அத்துடன் இந்த தவறுக்கு என் சக உறுப்பினர்களிடமும் மன்னிப்புக் கேட்டு கொள்கிறேன். இது ஒரு நேர்மையான தவறு என அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை , இந்த சம்பவம் குறித்து லிபரல் கட்சியை வழி நடத்தும் கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ எந்த ஒரு கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.