ட்ரம்ப்பை எச்சரித்துள்ள கனேடிய பிரதமர் மார்க் கார்னி
கனடாவின் 24ஆவது பிரதமரான மார்க் கார்னி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கனடா மீது கூடுதல் வரிகளை விதித்தாலோ கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக மாற்ற அழுத்தம் தந்தாலோ அமெரிக்கா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.
மார்க் கார்னி கருத்து
இது தொடர்பாக மார்க் கார்னி கூறுகையில் , “கனடா ஒருபோதும், எந்த வகையிலும், வடிவத்திலும் அமெரிக்காவின் திமிருக்கு அடிபணியாது. நாங்கள் ஒரு போதும் அமெரிக்காவின் மாகாணமாக இணைய மாட்டோம்.
அமெரிக்கர்கள் எங்களுக்கு மரியாதை காட்டும் வரை எனது அரசாங்கம் கட்டணங்களை குறைக்காது. ட்ரம்ப்பை நாங்கள் வெல்ல விட மாட்டோம். இந்த மோதலில் நாங்கள் உறுதியாக இருப்போம்.
நாங்கள் உணர்ந்து கொண்ட பாடம் ஒன்றுதான். எங்களுக்கொரு அயல் நாடுள்ளது. இத்தனை காலம் நாங்கள் நம்பிய அந்த அயல் நாட்டை இனியும் நம்ப முடியாது”, என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை ஒவ்வொரு வருடமும் கனடா அமெரிக்காவிற்கு கணிசமான அளவு கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரத்தை வழங்கி வருகிறது.அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்து விதமான மின்சாரம், எரிபொருளையும் நிறுத்துவோம் என்று கனடா தெரிவித்து உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.