அமெரிக்க கட்டிட விபத்தில் சிக்கிய கனேடியர்கள்: வெளிவரும் அதிர்ச்சி தகவல்
அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், குறைந்தது நான்கு கனேடியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் மியாமியில் உள்ள கனேடிய தூதரக அதிகாரிகள் கூடுதல் தகவல்களை சேகரிக்க உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளனர்.
மட்டுமின்றி, அவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் தொடர்பில் உள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. Surfside பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை 12 மாடி சாம்ப்லைன் டவர்ஸ் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் கிட்டத்தட்ட 160 பேர் மாயமாகியுள்ளனர்.
மட்டுமின்றி இந்த விபத்தில் குறைந்தது நான்கு பேர் இறந்துள்ளதாகவும் ஒரு சிறுவன் உட்பட 35 பேர்கள் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, கட்டிடம் விழுந்தபோது எத்தனை குடியிருப்பாளர்கள் அல்லது பார்வையாளர்கள் இருந்தார்கள் என்பது தொடர்பில் உறுதியான தகவல் இன்னும் தெரியவில்லை என்றே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.