கனடாவில் மின்சார வாகன விற்பனையில் வீழ்ச்சி
கனடாவில் மின்சார வாகன விற்பனையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது.
2025ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் புதிய வாகனப் பதிவு மொத்தத்தில் 5.9 வீதம் அதிகரித்திருந்தாலும், முழுமையான மின்சார வாகனப் பதிவுகள் 39.2 வீதம் வீழ்ச்சியடைந்தன.
புதிய வாகனங்கள்
அதே நேரத்தில் பிளக்-இன் ஹைபிரிட் வாகனப் பதிவுகளும் 2.2 வீதத்தினால் குறைந்துள்ளன.
ஆனால் பெட்ரோல் மூலம் தானாகவே சார்ஜ் செய்யக்கூடிய ஹைபிரிட் வாகனப் பதிவுகள் 2024ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 60.7 வீதம் அதிகரித்துள்ளன.
அனைத்து சவால்களையும் மீறி, 2025 இரண்டாம் காலாண்டில் 5,41,566 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது கொவிட்-19 பெருந்தொற்றுக்கு பின்னரான காலத்தில் அதிகபட்ச பதிவு எண்ணிக்கையாகும். வாகன வகைகளில், வேன்களின் பதிவுகள் 29% அதிகரித்துள்ளன.
இதே காலத்தில், ‘பூஜ்ய உமிழ்வினைக் கொண்ட வாகனங்கள்’ (Zero-emission vehicles) 29.5% வீழ்ச்சியடைந்துள்ளன. மின்சார வாகன விற்பனை குறைவதற்கான முக்கிய காரணமாக மானியக் குறைப்புகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.