பொதுத் தேர்தலை கனடியர்கள் முக்கியமானதாக கருதுகின்றனர்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கனடா இறைமைக்கு எதிரான தொடர்ந்த அச்சுறுத்தல்களுக்கிடையே நடைபெறும் பொதுத் தேர்தல், இதுவரை நடத்தப்பட்ட தேர்தல்களிலேயே மிகவும் முக்கியமானதாக கனடியர்களின் பெரும்பான்மையினர் நம்புகிறார்கள்.
நானோஸ் ரிசர்ச் நிறுவனம் மேற்கொண்ட புதிய கருத்துக் கணிப்பின் படி, 86 சதவீதம் கனடியர்கள் இந்த தேர்தல் முந்தையவற்றைவிட முக்கியம் என கருத்து வெளியிட்டுள்ளனர்.
ஒன்ராறியோ மற்றும் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணங்களில் 90 வீதமான மக்களும், கியூபெக்கில் 79.2 வீதமான மக்களும் பொதுத் தேர்தலை மிக முக்கியமானதாகக் கருதுகிறார்கள்.
இந்த கருத்துக் கணிப்பு மார்ச் 29 முதல் ஏப்ரல் 1 வரை 1,054 கனடியர்களை தொலைபேசி மற்றும் ஆன்லைன் வழியாக தொடர்புகொண்டு நடத்தப்பட்டது.
கனடியர்கள் தேர்தல் மற்றும் தங்களின் தேர்வுகளை மிகவும் தீவிரமாக கவனித்து வருகின்றனர் என நானோஸ் ரிசர்ச் நிறுவனத்தின் முக்கிய தரவியலாளர் நிக் நானோஸ் கூறினார்.
இந்த தேர்தலில், பெரும்பாலான கனடியர்களுக்கு வாக்களிக்கும் முக்கியத் தீர்மானம் யார் தலைவராக இருப்பார்கள் என்பதில்தான் உள்ளது.
39% பேர் தங்கள் வாக்களிப்பு தேர்வு தலைவரின் அடிப்படையில் இருக்கும் என கூறியுள்ளார்.