கனடாவில் முக்கியத்துவம் பெறும் இரண்டு துறைகள்
கனடாவில் விவசாயம் மற்றும் வாகன உற்பத்தி அகிய துறைகளை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என நாட்டு மக்கள் கருதுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்கா விதித்த வரிகளால் பாதிக்கப்பட்ட தொழில்துறைகளில், மத்திய அரசு அதிக ஆதரவு வழங்க வேண்டிய முக்கிய துறைகள் விவசாய மற்றும் வாகன உற்பத்தி என பெரும்பாலான கனேடியர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
நானோஸ் ரிசர்ச் (Nanos Research) நடத்திய புதிய கருத்துக்கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

பங்கேற்பாளர்களிடம், அரசு எந்த துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்று கேட்டு, அவர்கள் குறிப்பிடும் முன்னுரிமை இரண்டு துறைகள் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டது.
இது அரசியல் ரீதியாக சுவாரஸ்யமானது; ஏனெனில் நாடு முழுவதும் ஒரே ஒரு துறை எல்லோருக்கும் முக்கியமில்லை, மாறாக மாகாணத்தின்படி முன்னுரிமைகள் மாறுகின்றன ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கணிப்பில், விவசாயத் துறை மிக உயர்ந்த முன்னுரிமை பெற்றுள்ளது — 29% பேர் இதை முதல் இடமாகவும், மேலும் 19% பேர் இரண்டாம் இடமாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து வாகனத் துறை 24% முதல் இடம், 18% இரண்டாம் இடம் என நெருங்கிய இடத்தில் உள்ளது.
புதிய பிரதமரான மார்க் கார்னி தற்போது பல்வேறு மாகாணங்களின் எதிர்பார்ப்புகளை சமநிலைப்படுத்த வேண்டிய அரசியல் சவாலில் உள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.